Makkah Live Stream Video
Download Tamil Quran Android App
அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹ்…! அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, அல்லாஹ்வின் மகத்தான அருளால் திருக்குர்ஆன் தமிழாக்கம் மென்பொருள் தற்போது பல சிறப்பம்சங்களோடு மிகவும் புதுப் பொலிவுடன் மக்களின் தேவை கருதி வெளியிடப்படுகிறது. இதில் தரப்பட்டுள்ள மிக முக்கியமான சிறப்பம்சம் “அரபு மொழியுடன் கூடிய தமிழாக்கம்” ஆகும். தமிழாக்கத்திற்காகவும் அரபு வசனங்களுக்காகவும் தனித்தனியாக இரண்டு மென்பொருட்களை பயன்படுத்தும் சிரமம் இனி வேண்டாம்.
தரப்பட்டுள்ள வசதிகள்:
* அரபு மொழி மற்றும் தமிழாக்கம்
* தேவைப்படும் வசனங்களை புக்மார்க் செய்து கொள்ளலாம்.
* விருப்பமான வசனங்களை அரபி அல்லது தமிழ் அல்லது அரபு தமிழ் எனும் வகையில் தனித்தனியாக காப்பி செய்து கொள்ளலாம்.
* Go To வசதியின் மூலம் விரும்பிய வசனங்களுக்கு இலகுவாக செல்லலாம்.
* படிப்பவற்றை அதே இடத்திலேயே முகநூல், வாட்ஸ் அப், டிவிட்டர் போன்றவற்றில் பகிர்ந்து கொள்ளலாம்.
* பார்வை குறைவுடையவர்கள் சிரமமில்லாமல் வாசிக்க எழுத்து அளவை அதிகப்படுத்தி கொள்ளலாம்.
* இடையிடையே தரப்பட்டிருக்கும் எண்களை அழுத்துவதன் மூலம் அதன் விளங்கங்களை அடிக்குறிப்பின் வாயிலாக படித்து கொள்ளலாம்.
* வேகமாக விரும்பிய அத்தியாயத்திற்கு செல்வதர்கேற்ப Speed Scroll வசதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வசதிகளை குர்ஆன் வசனங்களின் இடது புறமுள்ள ஊதா நிற எண் வரிசைகளை அழுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.